முஸ்லிம் இளைஞனை கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்கள் - அதிர்ச்சி வீடியோ
அசாமில் முஸ்லிம் இளைஞனை கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து தெருதெருவாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இளைஞனின் கன்னத்தில் அறைந்த நபர்கள்
அந்த வீடியோவில், அசாம், ஹஜோவில் இந்து ஜாக்ரன் மஞ்ச் உறுப்பினர்கள், "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கமிடுகின்றனர். பின்னர், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மசூத் அப்துல்லா என்ற முஸ்லீம் இளைஞனின் கன்னத்தில் ஓங்கி அடிக்கிறார்.
பின்னர், அவனின் காதை பிடித்து கிள்ளுகிறார். இதனையடுத்து, அந்தக் கூட்டம் மசூத் அப்துல்லாவை காதைப் பிடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. பின்னர் வலுக்கட்டாயமாக அந்த இளைஞனை தெரு தெருவாக காதைப் பிடித்தப்படியே நடக்கவைத்து இழுத்துச் சென்றனர்.
நெட்டிசன்கள் கண்டனம்
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டின்சன்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பல முஸ்லீம் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.