நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதலவர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

India Andhra Pradesh N. Chandrababu Naidu
By Vidhya Senthil Sep 06, 2024 05:08 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.

 சந்திரபாபு நாயுடு

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதலவர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ | Andhra Cm Chandrababu Naidu Escapes Train Accident

இரு மாநிலத்தைப் புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு இடங்களிலும் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

முதல்வர் குறித்தே அவதூறு கருத்து - வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!! சிக்கலில் நடிகை ஸ்ரீரெட்டி

முதல்வர் குறித்தே அவதூறு கருத்து - வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!! சிக்கலில் நடிகை ஸ்ரீரெட்டி

இதனையடுத்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பாதிப்புகள் குறித்து நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 வீடியோ 

இந்தநிலையில்,விஜயவாடா அருகே கிராமம் ஒன்றில், ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது,அந்த வழித்தடத்தில் எக்பிரஸ் ரயில் ஒன்று வேகமாகக் கடந்து சென்றது.

நூலிழையில் உயிர் தப்பிய ஆந்திர முதலவர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ | Andhra Cm Chandrababu Naidu Escapes Train Accident

சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கத்தில் அந்த ரயில் சென்றதால், பாதுகாப்புப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.