திணறிய ரோஜா; சொல்லிக்கொடுத்த முதல்வர், சிக்சர் தான் - வைரலாகும் வீடியோ!
அமைச்சர் ரோஜாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டிங் கற்றுக் கொடுத்துள்ளார்.
அமைச்சர் ரோஜா
தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிய ரோஜா தற்போது ஆந்திர அமைச்சராக உள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்கி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், 'ஆடுதாம் ஆந்திரா' அதாவது விளையாடு ஆந்திரா என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது வரும் பிப்ரவரியில் நடக்கவுள்ளது.
சுவாரஸ்ய சம்பவம்
முதல் போட்டியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூரில் தொடங்கி வைத்தார். அதில் கலந்துக்கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா, கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தடுமாறினார்.
அப்போது, முதல்வர் அவருக்கு பேட்டை எப்படிப் பிடிப்பது என்று கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ரோஜா, பந்தைப் பறக்க விட்டு சிக்சர் அடித்து அசத்தினார்.
இதனை, ஜெகன் மோகன் ரெட்டி கைதட்டி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் போட்டிகள் பிப்.10ஆம் தேதி வரை, 57 நாட்களுக்கு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.