இரவோடு இரவாக நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?

Roja
By Sumathi Jun 10, 2023 05:41 AM GMT
Report

நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ரோஜா 

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு தீவிர அரசியலில் களம் இறங்கினார்.

இரவோடு இரவாக நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு? | Actress Roja Selvamani Admitted To Apollo Hospital

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதி

தற்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் ரோஜா, திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரவோடு இரவாக நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு? | Actress Roja Selvamani Admitted To Apollo Hospital

கால் வலி மற்றும் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.