திருத்தணியில் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய நடிகை ரோஜா!

Roja Andhra Pradesh Viral Photos
By Sumathi Jul 24, 2022 06:32 AM GMT
Report

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகை ரோஜா காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ரோஜா

 திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ் திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா

திருத்தணியில் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய நடிகை ரோஜா! | Minister Roja Selvamani Kavadi In Thiruthani

தனது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர் கே செல்வ மணியுடன் காவடி எடுத்து வந்து முருகனுக்கு காவடி செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார். வேண்டுதலை நிறைவேற்றிய ஆந்திர அமைச்சர் ரோஜா செல்வமணி முருகனை தரிசனம் செய்தார்.

திருத்தணியில் காவடி

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் வந்து தரிசித்து செல்வதாக தெரிவித்தார்.

திருத்தணியில் காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய நடிகை ரோஜா! | Minister Roja Selvamani Kavadi In Thiruthani

தானும் குடும்பமும் மட்டுமல்லாது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தாரும் நீடூழி வாழ முருகனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார். திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 தேர் வீதி வலம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்தனர்.

சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சென்ற சுவாமி, அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த தெப்பத் திருவிழாவை பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும் அமர்ந்து அரோகரா அரோகரா என்று பக்தி முழங்க விண்ணைப் பிளக்க கோஷம் எழுப்பி, சுவாமியை தரிசனம் செய்தனர். 

விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்திருந்தார். இந்த தெப்ப திருவிழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.வாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல். பி.ஜான் வர்கிஸ் ஆகியோரும் முருகப்பெருமானை தரிசித்தனர்.