மேடையில் முதலமைச்சருக்கு முத்தம் கொடுத்த நடிகை ரோஜா - வைரலாகும் வீடியோ காட்சி..!
ஆந்திராவின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் நடிகை ரோஜா மேடையில் செய்த சம்பவம் வீடியோ காட்சியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ரோஜா இவர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு தீவிர அரசியலில் களம் இறங்கினார்.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின் அவருக்கு 2014,2019 சட்டமன்ற தேர்தல்களில் சீட் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்,2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தனி அன்பை பெற்றவர் நடிகை ரோஜா. ரோஜா மீது மரியாதை வைத்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை அமைச்சராக்கியும் உள்ளார்.
கடந்த மாதம் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மேடைக்கு வந்த ரோஜா சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவின் தலையில் கை வைத்த ஆசிர்வாதம் வழங்கினார்.
பின்பு ரோஜா முதலமைச்சரின் கையை பிடித்து முத்தம் கொடுத்தார்.தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காட்சிகள் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,இருவரும் அண்ணன்,தங்கை என்று பலரும் பேசி வருகின்றனர்.