பாமக கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி; படுத்துக்கொண்டே வெற்றி பெறுவது எப்படி? ராமதாஸ்
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை.
செயலாளர்கள் கூட்டம்
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இக்கூட்டத்தை அன்புமணி உள்பட பல மாவட்ட தலைவர்கள், செயலர்கள் கூட்டத்தை பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மொத்தமாக 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் தகவல்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணிக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம். வந்து கொண்டே இருக்கலாம். மாநாட்டு களைப்பில் இருப்பதால் சிலர் கூட்டத்தில் வரவில்லை. கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொடர்பு கொண்டு காரணங்களை தெரிவித்தனர்.
பாமகவில் கோஷ்டி மோதல் என்பதே கிடையாது. செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியபடி மாற்றப்படுவார்கள். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது.
50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்று பெறுவது எப்படி? என்ற ஆலோசனையை கூறியுள்ளேன். தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நிச்சயமாக கூட்டணி அமைத்தே போட்டி எனத் தெரிவித்துள்ளார்.