தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!
தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் அடுத்த தளவாய்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது "இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
உரிமைத்தொகை கிடைக்கும்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கூறினால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்' என்று அவர் பேசியுள்ளார்.