'ரெண்டு கண்ணையும் விட்டுட்டு, தோல உரிங்க சார்' என்ற காலம் மாறிவிட்டது - அமைச்சர் அன்பில் மகேஷ்!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Jiyath Sep 27, 2023 07:41 AM GMT
Report

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்ட்டியளித்துள்ளார்.  

மாணவன் தற்கொலை

புதுக்கோட்டை விஜயபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற 17 வயது மாணவன் மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளி தலைமை ஆசிரியர் முடியை வெட்டும்படி கூறியதால் மாணவன் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவனின் உறவினர்கள் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்களிடம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கச் சொன்ன தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதை ஏற்க முடியாது என்று பல்வேறு தரப்புகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அன்பில் மகேஷ் பேட்டி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது "மாணவர்களுக்கு அறிவுரை கொடுப்பதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம்.

ஆனால் மாணவர்களை நல்வழி படுத்த நாங்கள் எதுமே சொல்லக்கூடாத? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு காலத்தில், நாம் படித்த காலத்தில் எல்லாம் "ரெண்டு கண்ணையும் விட்டுட்டு, தோல உரிங்க சார்..! என்று கூறிய பெற்றவர்கள் இருந்தது உண்மை. அது அக்கறையின் காரணமாகத்தான் சொன்னார்கள். நம்முடைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே இருந்த உறவே அப்படிதான் இருந்தது.

உரிமையோடு திட்டுவார்கள், அடிப்பார்கள், பின்னர் அனைத்து கொள்வார்கள். ஆனால் இன்றைக்கு மாணவ செல்வங்களின் "ட்ரெண்டே" மாறிவிட்டது. கொஞ்சம் கோவமாக பேசினால் கூட, அடுத்த நிமிடமே தவறான முடிவை உடனடியாக எடுக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் இதுபோன்ற ஒரு சூழ்நிலை இனியும் நிகழாமல் இருப்பதற்காக என்னென்ன பயிற்சிகள் கொடுக்கலாம், என்ன திட்டங்கள் கொண்டுவரலாம் என இந்த சம்பவத்தின் மூலம் மேம்படுத்துவதற்கான வழிகளில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.