ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் - வாய்பிளக்க வைக்கும் ஆடம்பர பரிசுகள்!

Marriage Anant Ambani
By Sumathi Jul 23, 2024 09:30 AM GMT
Report

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் விருந்தினர்கள் ஆடம்பரமான பரிசுகளை வழங்கியுள்ளனர்.

ஆனந்த் - ராதிகா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்-ன் திருமணம் உலகமே வியக்கும் வண்ணம் கோலகலமாக நடந்து முடிந்தது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.

anant ambani-radhika

திருமணத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என்று அனைவருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. தம்பதிகள் தங்கள் பெற்றோர் மற்றும் விருந்தினர்களிடமிருந்து ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

முதலை தோல் ஜாக்கெட் - அனிமல் லவ்வர் ஆனந்த் அம்பானியின் ஜாக்கெட் விலை தெரியுமா?

முதலை தோல் ஜாக்கெட் - அனிமல் லவ்வர் ஆனந்த் அம்பானியின் ஜாக்கெட் விலை தெரியுமா?

திருமண பரிசுகள்

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி புதுமணத் தம்பதிகளுக்கு பாம் ஜுமேராவில் 3,000 சதுர அடி பரப்பளவில் ஆடம்பரமான மாளிகை உட்பட சில ஆடம்பரமான பரிசுகளை வழங்கினர். அமேசான் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், ரூ. 11.50 கோடி மதிப்புள்ள புகாட்டியை பரிசாக வழங்கினார்.

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணம் - வாய்பிளக்க வைக்கும் ஆடம்பர பரிசுகள்! | Anant Ambani Radhika Wedding Gifts Viral

ஜான் சினா அவர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினியை பரிசாக வழங்கினார். மார்க் ஜுக்கர்பெர்க் ரூ. 300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை அனுப்பியுள்ளார். பில்கேட்ஸ் ரூ.9 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

சுந்தர் பிச்சை ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக வழங்கினார். இவான்கா டிரம்ப் ரூ. 80 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையை வழங்கியுள்ளார். மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.