ஆனந்த் அம்பானியை வளர்த்தது நீதா இல்லை..இவங்க தான்? வைரலாகும் புகைப்படம்!

Marriage Social Media Anant Ambani Radhika Merchant
By Swetha Jul 17, 2024 07:52 AM GMT
Report

ஆனந்த் அம்பானியை வளர்த்தவர் அவரது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி

பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில், ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். இதனையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஆனந்த் அம்பானியை வளர்த்தது நீதா இல்லை..இவங்க தான்? வைரலாகும் புகைப்படம்! | Anant Ambani S Former Nanny Lalita Shares A Post

பெரும்பாலும், நட்சத்திர தம்பதிகள், பணக்காரர்கள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்க ஒரு குழந்தை பராமரிப்பாளரை நியமிப்பது வழக்கம். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கானின் மகன்களை வளர்த்தவர் பிரபல நர்ஸ் லலிதா சில்வா.

இவர் தான் ஆனந்த் அம்பானியை சிறுவயதில் கவனித்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாது. அண்மையில் அவரது திருமணத்தில் லலிதா சில்வா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், அனந்தின் த்ரோபேக் படத்தையும் லலிதா சில்வா பகிர்ந்துள்ளார்.

லண்டனில் தான் கல்யாணம்; இடத்தை மாற்றிய ஆனந்த் அம்பானி - என்ன காரணம்?

லண்டனில் தான் கல்யாணம்; இடத்தை மாற்றிய ஆனந்த் அம்பானி - என்ன காரணம்?

வளர்த்தது இவங்க தான்..

மேலும் ஆனந்த் தனது குழந்தைப் பருவத்தில் "மிகவும் நல்ல பையனாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிஸ்னி வேர்ல்டில் ஆனந்த் அம்பானி சிறுவயதில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை லலிதா சில்வாவின் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

ஆனந்த் அம்பானியை வளர்த்தது நீதா இல்லை..இவங்க தான்? வைரலாகும் புகைப்படம்! | Anant Ambani S Former Nanny Lalita Shares A Post

அந்த பதிவில், “ஆனந்த் சிறுவயதில் மிகவும் நல்ல பையன். இப்போது வரை அவர் குடும்பம் மற்றும் அவரது சமூகக் குழுவில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுகிறார். பல ஆண்டுகளாக அம்பானி குடும்பத்தினர் தன்னிடம் காட்டிய அன்பு மற்றும் மரியாதைக்கும் நன்றி,

ஆனந்த் அம்பானியும் அம்பானி குடும்பமும் என் வாழ்க்கையில் கொண்டு வந்த மகிழ்ச்சி மற்றும் அன்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிமையான நினைவுகள் மற்றும் அன்பான தருணங்களை நான் மதிக்கிறேன்,

வைரல் புகைப்படம்

மேலும் அவர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் மரியாதைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்களின் கருணையும், பெருந்தன்மையும் என்னை ஊக்கப்படுத்துகின்றன.

ஆனந்த் அம்பானியை வளர்த்தது நீதா இல்லை..இவங்க தான்? வைரலாகும் புகைப்படம்! | Anant Ambani S Former Nanny Lalita Shares A Post

என் வாழ்க்கையில் நீதாவும், முகேஷ் அம்பானி சாரும் வந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்.அவர்கள் இன்னும் என்னை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக அரவணைத்து வருகின்றனர்.

ஆனந்த் மற்றும் ராதிகா இருவரும் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அம்பானி குடும்பத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.