லண்டனில் தான் கல்யாணம்; இடத்தை மாற்றிய ஆனந்த் அம்பானி - என்ன காரணம்?
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்டுக்கும் லண்டனில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் - ராதிகா
பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அது போல் ஈஷா அம்பானிக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். இதனையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகமாக நடந்தது.
திருமணம்
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் ஜூலை மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக்பார்க் எஸ்டேட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முக்கிய விஐபிக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீ வெட்டிங் விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மூன்று வேளையும் அனைத்து விதமான உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. உணவுக்கு மட்டும் ரூ 130 கோடி செ்லவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.