நீதா அம்பானி 60வது பிறந்தநாள்; அடேங்கப்பா..முகேஷ் அம்பானி கொடுத்த கிஃப்ட் என்னனு தெரியுமா?

Reliance Mukesh Dhirubhai Ambani
By Sumathi Nov 02, 2023 08:18 AM GMT
Report

நீதா அம்பானி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நீதா அம்பானி

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. முகேஷ் அம்பானி உடன் 22 வயதில் காதலித்து இருவீட்டார் ஒப்புதல் உடன் திருமணம் செய்து கொண்டார். நீதா தலால் ஒரு நடுத்தர குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.

nita ambani

இவரது பெற்றோர் வீந்திரபாய் தலால் மற்றும் பூர்ணிமா தலால். ரவீந்திரபாய் தலால் அப்போதே பில்லியனர் குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்ய பிர்லா குழுமத்தில் மூத்த நிர்வாகியாக இருந்தார்.

396 கோடி: உலகின் விலையுயர்ந்த ஐபோன்.. நீதா அம்பானிக்கு சொந்தமா? ஆச்சர்ய தகவல்!

396 கோடி: உலகின் விலையுயர்ந்த ஐபோன்.. நீதா அம்பானிக்கு சொந்தமா? ஆச்சர்ய தகவல்!

60வது பிறந்தநாள்

நீதா அம்பானி 6 வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்கத் தொடங்கி ஆரம்ப காலத்தில் பள்ளிகளில் நடன ஆசிரியாக இருந்தார். நீதா அம்பானியின் வாழ்க்கை முகேஷ் அம்பானி உடனான திருமணத்திற்கு பின்பு தலைகீழாக மாறியுள்ளது.

mukesh ambani with wife

இவர் தினமும் குடிக்கும் டீ கப் விலை ஒன்று 3 லட்சம். பிங்க் வைரம் கொண்ட ஐபோன், 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய புடவை, 100க்கும் அதிகமாக ஆடம்பர கார்கள், பல கோடி மதிப்பிலான புடவைகள், 400, 600 கோடி ரூபாய்க்கு நகைகள், 15000 கோடிக்கு வீடு, சமையல்காரர்-க்கு மாதம் 2 லட்சம் வரையில் சம்பளம் என ஆடம்பர வாழ்வுக்கு சொந்தக்காரர்.

இந்நிலையில், இன்று நீதா தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதே நாளில் இந்தியாவின் மிகப்பெரிய ஆடம்பர மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா திறக்கப்படுவது கிஃப்ட் ஆகவே பார்க்கப்படுகிறது.