முதலை தோல் ஜாக்கெட் - அனிமல் லவ்வர் ஆனந்த் அம்பானியின் ஜாக்கெட் விலை தெரியுமா?
ஆனந்த் அம்பானி திருமணம் நாளை மறுநாள் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
அம்பானி திருமணம்
ஜாம்நகரில் நடைபெற்ற 3 நாள் திருமணம் முந்தைய கொண்டாட்டத்தில் துவங்கி, அனைத்துமே மக்களுக்கு பிரமாண்டத்தை உண்டாகும் வகையில் மகனின் திருமணத்தை நடத்தி வருகிறார் அம்பானி.
வரும் 12-ஆம் தேதி ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம், மும்பை Jio World Centre'இல் நடைபெறவுள்ளது. 2 திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் முடிவடைந்து விட்ட நிலை தற்போது திருமண பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த கொண்டாட்டத்திற்காக பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர் மும்பை வந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொடுத்துள்ளார். அப்போது அவருடன் திருமண தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள, அப்படம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
முதலை தோலில்
அப்படி என்னடா விஷயம் என பார்த்தால், புகைப்படத்தில் ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் ஜாக்கெட் முதலை தோலினால் செய்யப்பட்டதாம். தன்னை ஒரு விலங்கு விரும்பி என கூறி கொள்ளும் ஆனந்த் அம்பானி, இப்படி முதலை தோலினால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தற்கு பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
உண்மையில் இது முதலை தோலினால் செய்யப்பட்டதா என்பதே கேள்வி தான். ஆனால், அது குறித்த அடுத்தடுத்த தகவல்களையும் பலரும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது தான்.
சரி இவ்வளவு சொன்ன நம்ப நெட்டிசன்கள் ஜாக்கெட்டின் விலையை மட்டுமே சொல்லாமலா இருப்பார்கள்? அதன் விலை சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமாம்.