அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி!

Ammu Abhirami
By Sumathi Dec 24, 2023 08:31 AM GMT
Report

தான் சந்தித்த அவலங்கள் குறித்து அம்மு அபிராமி தகவல்கள் தெரிவித்துள்ளார்.

அம்மு அபிராமி

ராட்சசன் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றவர் அம்மு அபிராமி. தொடர்ந்து, அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

actress ammu abirami

அதன்பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

யார் படமானாலும் அப்படி நடிக்கமாட்டேன் - Chance கூட போயிருக்கு..!! சரண்யா பொன்வண்ணன் !!

யார் படமானாலும் அப்படி நடிக்கமாட்டேன் - Chance கூட போயிருக்கு..!! சரண்யா பொன்வண்ணன் !!

அடிப்படை உரிமை

சமீபத்தில், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள கண்ணகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், "பல கோடி போட்டு திரைப்படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை.

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி இன்ஃபக்‌ஷனே ஆகிருச்சு - அவலத்தை பகிர்ந்த அம்மு அபிராமி! | Ammu Abirami About Worst Experience

சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர். கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது.

இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.