பாத்ரூம் கூட இருக்காது..அதுலயா காசா மிச்சம் பண்ணுவீங்க ..!! அம்மு அபிராமி குமுறல்

Ammu Abhirami Tamil Actress
By Karthick Dec 15, 2023 08:01 AM GMT
Report

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரை ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அம்மு அபிராமி.

அம்மு அபிராமி

2018-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "ராட்சசன்" படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார் அம்மு அபிராமி. அந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளியான "அசுரன்" படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் அம்மு அபிராமி.

ammu-abhirami-slams-producer-for-cost-cutting-acts

அதனை தொடர்ந்து தற்போது பிஸியான நடிகையாக மாறியுள்ள அம்மு அபிராமி, தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகி, அடுத்தடுத்த படஙக்ளில் நடித்து வருகின்றார். இன்று கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள "கண்ணகி" படத்திலும் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாத்ரூம் கூட இல்ல

இந்நிலையில் தான் அம்மு அபிராமி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த சங்கடங்களை குறித்து தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், சில படங்களில் நடிகைகளுக்கு உடை மாற்ற கூட வெளி இடங்களில் வசதி செய்து கொடுக்காமல் இருக்கின்றனர் என்ற அவர், இதை தான் வேதனையில் சொல்கிறேன் என்றார்.

ammu-abhirami-slams-producer-for-cost-cutting-acts

இவ்வாறு பணம் மிச்சம் பிடித்து சம்பாதித்தால் அது நிலைக்குமா? என்று வினவிய அம்மு அபிராமி, முதலில் நடிப்பவர்களுக்கு basic needs செய்துகொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு பல சமயங்களில் யாரோ ஒருவர் வீட்டில் உடை மற்றெல்லாம் தன்னிடம் கூறியிருக்கின்றார் என்றும் வேதனையுடன் கூறினார்.