அம்மனுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பக்தர்கள்..!!
அம்மனுக்கு 108 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டி பக்தர்கள் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
பிறந்தநாள்
புதுச்சேரி மாநிலம் மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட மஹா பிரத்தியங்கிரா காளி கோவில் உள்ளது. இங்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது விஷேசம்.
மேலும் ஜென்மாஷ்டமி தினத்தில் பிரத்தியங்கிரா காளி அவதரித்த நாள் என்பதால் அன்றைய தினம் நடைபெறும் அஷ்டமி பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
108 கிலோ கேக்
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜென்மாஷ்டமி பிரித்தியங்கிரா காளி அவதாரத் திருநாளில் 108 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாடினர் . அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான அஷ்டமி மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
மாலை 7 மணிக்குத் தொடங்கிய பூஜைகள் மற்றும் யாகம் விடியற்காலை 5 மணி வரை நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.