Homework கொடுத்த நெருக்கம்! +2 மாணவனுடன் 4 நாட்கள் புதுச்சேரிக்கு எஸ்கேப்பான ஆசிரியை !!
விருதுநகரில் நடந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
விருதுநகர் காரியப்பட்டியில் தனியார் பள்ளியில், 17 வயது மாணவன் +2 படித்து வருகிறார். திடீரென அம்மாணவன் மாயமாகியிருக்கிறார். விவரம் தெரியாத மாணவனின் தந்தை ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மாணவர் படித்து வந்த அதே பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளவர் பாத்திமாகனி என்ற 40 வயதுடைய பெண்.
திருமணமாகி 2 குழந்தைகள் உடைய பாத்திமாகனி, மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவராவார். சம்பவத்தில் தொடர்புடைய மாணவன், வீட்டு பாடங்களை சரிவர எழுதாத நிலையில் இருந்துள்ளார். அதன் காரணமாக, அவருக்கு வீட்டு பாடம் எழுவதில் உதவி எழுத முன்வந்துள்ள டீச்சர் பாத்திமாகனிக்கும் மாணவருக்கும் பழக்கம் நெருங்கியுள்ளது. இதனை தெரிந்து கொண்ட பள்ளிநிர்வாகம் டீச்சரை நீக்கியுள்ளது.
கையும் களவுமாக
வேறொரு பள்ளிக்கு சென்று போதும் மாணவருக்கும் பாத்திமாகனிக்கும் பழக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. பழக்கம் தீவிரமடைந்த நிலையில், மாணவருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார் பாத்திமாகனி.
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் 4 நாட்களாக அவர்கள் புதுச்சேரியில் தங்கி இருந்தது கண்டறிந்து போலீசார் அவரை போக்சோசட்டத்தில் கைது செய்துள்ளனர்.