சிறுமியை கடத்தி 20 வயது வாலிபர் செய்த காரியம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
வாலிபர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன் என்ற பிரகாஷ் (24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
பின்னர் சிறுமியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷை கைது செய்தனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்றம் அதிரடி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரகாஷுக்கு 51 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஆனால், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதால்,
அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறையை அவர் அனுபவிக்க வேண்டும். மேலும் அவருக்கு, ரூ.34,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.