அமித் ஷா தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தெரியுமா?
அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகை தரவுள்ளார்.
அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகை தருகிறார். தொடர்ந்து 2 நாட்கள் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
அதன்படி நாளை மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்கிறார். அங்கு ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்பின், மாலை 5.40 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா, ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகம் வருகை
இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு மதுரையில் தங்குகிறார். ஏப்.13ல் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு செல்கிறார். பின் அங்கிருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி வரும் அவர், ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார்.
அதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர், ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்லும் அமித் ஷா, மதியம் 3 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து, திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். அங்கு ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்துவிட்டு, இரவு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.