வரலாற்று தவறு...அந்த 2 தவறுகளை மட்டும் நேரு தவிர்த்திருந்தால் !! ஆவேசமாக பேசிய அமித் ஷா..!!
நடைபெற்று வரும் மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேச்சு
இன்று கூடிய மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 போன்ற இரண்டு மசோதாக்கள் மக்களவையில் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த இரண்டு மசோதாக்கள் அநீதியை எதிர்கொண்டு அவமதிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்டவர்களான உரிமைகளை வழங்குவது தொடர்பானவை என்றார். அப்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் செய்த இரண்டு தவறுகளை அவர் குறிப்பிட்டார்.
நேருவின் 2 தவறுகள்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்கும் என்றும் அது வரலாற்றுத் தவறு என்று குற்றம்சாட்டினார்.
அதில், முதல் தவறு, இந்தியாவின் இராணுவம் வெற்றி அடைந்து வந்த நேரத்தில் போர்நிறுத்தத்தை அறிவித்தது ஏனென்றால், மூன்று நாட்களை தாண்டி போர்நிறுத்தம் இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று இந்தியாவின் பகுதியாக இருந்திருக்கும் என்றார். இரண்டாவதாக, உள்நாட்டுப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது என்று இரண்டு தவறுகளை அவர் செய்துள்ளார் என அமித் ஷா பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 3 ஆண்டுகளால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவம் ஏதும் நிகழ்வில்லை என்றும் வரும் 2026-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.