உதவி பண்ண கூட உத்தரவு வேண்டுமா..? தமிழக அரசை விளாசும் பாஜக..!!

Tamil nadu BJP
By Karthick Dec 06, 2023 11:30 AM GMT
Report

மழை நீர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவிட கூட அரசின் உத்தரவு வேண்டுமா? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

திணறும் மாநகரம்

சென்னை மாநகரின் பல இடங்களில் இரண்டு நாட்களாக பெய்த மழையின் நீரின் வெள்ளம் சாலைகள், வீடுகளில் நுழைந்து மக்களில் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. தமிழக அரசும் மீட்புப்பணிகளை முடிகிவிட்டிருக்கும் நிலையில், பலரும் அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.

does-helping-people-needs-govt-permit-bjp-asks

இந்நிலையில், தான் அரசை குற்றம்சாட்டி தமிழக பாஜக சார்பில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், கடலூரிலும் சென்னை அருகிலுமிருந்து படகுகளை வரவழைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதவியோடு மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர் சென்னை முடிச்சூரில் மக்களை மீட்க படகுகள் செலுத்துவதைக் கூட தடுக்க நினைக்கிறது தமிழக அரசு..

அரசின் உத்தரவு வேண்டுமா..?

மக்களுக்கு உதவ அரசு உத்தரவு வேண்டும் என்கிறதா அரசு? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சென்னையில் குறிப்பாக தாம்பரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக விவரங்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றது.

அரசின் பல தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதை பெரிதாக குறைகூறமுடியாது என்றும், இது போன்ற இயற்கை பிரச்சனைகளில் நாம் அரசை குறை சொல்லவும் கூடாது என்றும் சிலர் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.