அமித்ஷாவின் இந்த ஐந்து கேள்விகள்..ராகுல் காந்தியால் பதில் அளிக்க முடியுமா?

Amit Shah Rahul Gandhi Narendra Modi Lok Sabha Election 2024
By Swetha May 13, 2024 06:10 AM GMT
Report

ராகுல் காந்தியிடம் ஐந்து கேள்விகளை கேட்டு அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க சவால் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி

நடப்பாண்டில் மக்களவை தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதுவரையிலும் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நாட்டில் 4-ஆம் கட்டம் துவங்கியுள்ளது அதன் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அமித்ஷாவின் இந்த ஐந்து கேள்விகள்..ராகுல் காந்தியால் பதில் அளிக்க முடியுமா? | Amit Shah Has Five Questions For Rahul Gandhi

நாட்டின் அடுத்த அரசை முடிவு செய்யும் மக்களவை தேர்தல் நடந்து வருகின்றது. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக, எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி என இரு முனை போட்டி தீவிரமாக உள்ளது.

அந்த வகையில், பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் ராகுல் காந்தியை விமர்சிப்பதையே மும்முரம்காட்டி வருகிறார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிட ராகுல் காந்தி அஞ்சுகிறார் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.

அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி

அமித்ஷாக்கு வரலாறே தெரியாது; பாஜகவுக்கு பயம் -விளாசிய ராகுல் காந்தி

அமித்ஷா கேள்வி

வயநாடு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அந்த சவாலை ஏற்று உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். நேற்று அத்தொகுதியில் பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜீவ் காந்திக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமித்ஷாவின் இந்த ஐந்து கேள்விகள்..ராகுல் காந்தியால் பதில் அளிக்க முடியுமா? | Amit Shah Has Five Questions For Rahul Gandhi

பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா, "ராகுல்காந்திக்கு நான் பகிரங்கமாக 5 கேள்விகள் விடுக்கிறேன்.

1. 'முத்தலாக்' முறையை பிரதமர் மோடி ஒழித்துக் கட்டினார். அது நல்லதா? கெட்டதா? நீங்கள் 'முத்தலாக்'கை திரும்ப கொண்டுவர விரும்புகிறீர்களா? இல்லையா?

2. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு பதிலாக, பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமா? கூடாதா?

3. பிரதமர் மோடி நடத்திய துல்லிய தாக்குதல் நல்லதா? கெட்டதா? துல்லிய தாக்குதல் பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, அதை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

4.அயோத்தி ராமர் கோவிலுக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?

5. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

இந்த 5 கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டுத்தான், ரேபரேலி மக்களிடம் ராகுல்காந்தி வாக்கு கேட்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி இதற்கும் உரிய பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.