மற்றுமொரு அவதூறு வழக்கு ..ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்..!!
மோடி குறித்து அவதூறு கருத்தை தெரிவித்தார் என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கு
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ‘‘பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருவதாகக் கூறும் அக்கட்சியின் தலைவர் (அப்போது கட்சியின் தலைவராக அமித் ஷா இருந்தார்) மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவாகி இருக்கிறது என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து சுல்தான்பூரைச் சேர்ந்த பாஜகவை விஜய் மிஸ்ரா என்பவர் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அந்த வழக்கில் அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
சம்மன்
இவ்வழக்கில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி வாதம் நிறைவுற்ற நிலையில், நவம்பர் 27-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி யோகேஷ் யாதவ் ஒத்திவைத்தார்.அன்றைய தினத்தின் விசாரணையின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆஜராகும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 27-ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராகாததால் நேற்றைய தினம் அதாவது டிசம்பர் 16-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது.
இருப்பினும் மீண்டும் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் ஜன. 6-இல் ராகுல் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் மீண் டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.