மக்களவை விவகாரம்..!! கர்நாடக பாஜக எம்.பி'க்கு போலீஸ் சம்மன்..!!
பாஸ் வழங்கிய பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவிற்கு டெல்லி போலீஸ் சம்மன் வழங்கியுள்ளது.
மக்களவை விவகாரம்
இந்திய மக்கலவையில் மக்களவை அலுவல் நடந்து கொண்டிருந்த போது இருவர் சட்டென உள்ளே குதித்து, மர்ம பொருளை வீசி புகை மூட்டத்தை ஏற்படுத்தியது தெரிந்த விஷயமே. இந்திய ஜனநாயகத்தின் கோவில் என கூறப்படும் இந்திய நாடாளுமன்றத்தில் 4 அடுக்க பாதுகாப்பை மீறி இந்த செயலில் இருவர் ஈடுபட்டுள்ளது விமர்சனனத்திற்குள்ளானதை தவிர, பெரும் அதிர்ச்சியையே பலருக்கும் கொடுத்துள்ளது.
இவர்களுக்கு மக்களவைக்கு வர பயன்படுத்திய பாஸ் மைசூர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பேரில் வழங்கப்பட்டவையாகும். இந்நிலையில், தான் பலரும் அவரை குறித்து விமர்சனங்களை வைக்க துவங்கினர்.
சம்மன்
இந்நிலையில், விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்து தனது விளக்கத்தை அளித்தாகவும் கூறப்பட்டது. அதில், கைதான மனோரஞ்சன் தனது தொகுதியை சேர்ந்தவர் என்பதாலும் அவரின் தந்தையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக தான் பாஸ் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இந்த அத்துமீறலில் கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீஸ், இதில் சம்மந்தப்பட்டுள்ள மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவிற்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த விசாரணையில் தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக மேலும் தகவல்கள் ஏதேனும் கிடைக்குமா..? என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் ஆதாயங்கள் கிடைக்குமா? என்ற கோணத்தில் தற்போது இதனை உற்றுநோக்கி வருகின்றனர்.