நிவாரணமாக 10 ஆயிரம் வழங்கவேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்..!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Dec 16, 2023 08:39 AM GMT
Report

பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்திய குழுவினர் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள் என்று அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி

இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்திய குழுவினர் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள் என்றார்.

10k-should-be-given-as-flood-relief-annamalai

தமிழக அரசின் தவறை முதலமைச்சர் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற அண்ணாமலை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு என்று விமர்சித்தார்.

கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது - வானதி ஸ்ரீனிவாசன் வருத்தம்!!

கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது - வானதி ஸ்ரீனிவாசன் வருத்தம்!!

10 ஆயிரம் வழங்க வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை என்பது கஷ்டத்தில் பங்கு கொள்ள மட்டுமே என்று சுட்டிக்காட்டி, வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

10k-should-be-given-as-flood-relief-annamalai

மேலும், பாஜக வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள் என்றும் தெரிவித்து சென்றார். முன்னதாக, தமிழகத்தில் மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் நாளை துவங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.