கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது - வானதி ஸ்ரீனிவாசன் வருத்தம்!!

Tamil nadu Coimbatore BJP Vanathi Srinivasan
By Karthick Dec 16, 2023 04:11 AM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்

வானதி அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது.

kovai-cant-bear-another-terrorist-attack-vanathi

தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன் அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

மிக்ஜாங் புயல் நிவாரணம்...!! வரும் 17-ஆம் தேதி துவங்கி வைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!

மிக்ஜாங் புயல் நிவாரணம்...!! வரும் 17-ஆம் தேதி துவங்கி வைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!

கோவை தாங்காது

ஏற்கனவே 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு, 2022ம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டுவெடிப்பு என பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கோவை மீண்டு வருவதற்குள் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கோவைக்கு கொண்டுவரப்பட்ட 2953 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் வெளியான பதட்டம் தணிவதற்குள் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கோவை மத்திய சிறைச்சாலையில் தீவிரவாத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

காலம் தாழ்த்தாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும். அப்போதுதான முழு உண்மைகளும் விரைவாக வெளிவரும் தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது..என குறிப்பிட்டுள்ளார்