Saturday, May 3, 2025

மிக்ஜாங் புயல் நிவாரணம்...!! வரும் 17-ஆம் தேதி துவங்கி வைக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!

M K Stalin Tamil nadu DMK
By Karthick a year ago
Report

தற்போது நிவாரணத்திற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது

மிக்ஜாங் புயல்

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியது மிக்ஜாங் புயல் மற்றும் மழை. தொடர்ந்து இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும்பான்மையாக பாதித்தது.

stalin-gives-flood-relief-in-chennai-velachery

அதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தீவிர மீட்புப்பணிகளை மேற்கொண்டு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது என்றே கூறலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நிர்ணயித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது.

மசோதா நிலுவை - ஆளுநருக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!!

மசோதா நிலுவை - ஆளுநருக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!!

வரும் 17-ஆம் தேதி

4 மாவட்டங்களில் கணிசமான பாதிப்புகளை சந்தித்த பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட அதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் தற்போது ரேஷன் கடைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

stalin-gives-flood-relief-in-chennai-velachery

தற்போது இந்த நிவாரணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வரும் 17-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் வைத்து வழங்கி துவங்கிவைக்கவுள்ளார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.