மசோதா நிலுவை - ஆளுநருக்கு அழைப்பு விடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின்..!!
மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஆளுநருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் தமிழக அரசு விவகாரம்
சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்ந்தி வருவதாக தமிழக நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தது. இதில், உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரிடம் கேள்விகளை முன்வைத்தார்.
அதே போல, தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் மசோதா விவகாரத்தில் கலந்தாலோசித்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.மேலும்,”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
இந்நிலையில், தான் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக முதல்வர் ஆலோசனைக்கு அழைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.