பிடித்த வேலைதான் வேண்டும் - ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய பெண்!
பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை பெண் ஒருவர் உதறியுள்ளார்.
ரூ.83 லட்சம் சம்பளம்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் வலேரி வால்கோர்ட்(34). இவர் கூகுள், அமேசான் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அப்போது ரூ.83 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், தனக்கு பிடித்த வேலை செய்வதற்காக ரூ.83 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு பிரான்ஸ் சென்றுள்ளார்.
பேஸ்ட்ரி உதவியாளர்
அங்குள்ள ஒரு பகுதியில் இயங்கி வரும் உணவகத்தில் பேஸ்ட்ரி உதவியாளராக பணியாற்ற தொடங்கியுள்ளார். அதில் அவருக்கு ரூ.25 லட்சம் வரை சம்பளம் மற்றும் ருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய 5 வார விடுமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பை விட தற்போது குறைவான சம்பளம் என்பது எப்போதும் எனக்கு வருத்தத்தை தந்ததில்லை. அமெரிக்காவில் இருந்ததை விட நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்த நாட்டின் கலாச்சாரம், எனது ஓய்வு நேரம் என நான் இங்கு மகிழ்ச்சியாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.