இங்க திறமைக்கே இடம் கிடையாதா ..? - கொந்தளித்த கூகுள் ஊழியர்
கடந்த சில நாட்களாக அமேசான்,பேஸ்புக், நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட் குறைப்பு செய்து வருகின்றது.
கூகுள் நிறுவனம் பணி நீக்கம்
கூகுளில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹைத்ராபாத்தை சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
திறமைக்கு மதிப்பு இல்லையா
பணியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்ஷ் கூகுளின் சிறந்த பணியாளர் என்ற விருதை வாங்கியுள்ளார். இந்த நிலையில் ஹர்ஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஏன் நீக்கப்பட்டேன்? இங்கு திறமைக்கு இடம் இல்லையா? என்று குறிப்பிட்டுள்ளார் .
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.