இந்த செயலை எல்லாம் சகிக்க முடியாது - கூகுள் எடுத்த முடிவு!
போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம்
கூகுள், அமேசான் நிறுவனங்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு(ஏஐ), கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மதிப்பு 1.2 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் சமயத்தில்
பணிநீக்கம்
இதுபோன்ற தொழில்நுட்பங்களை வழங்குவது நியாயமற்றது எனக் கூறி கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க், கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் சிலர் 10 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதன்பின் கூகுள் புகாரளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கூகுள் நிறுவன சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கிரிஸ் ராக்கோ ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளை கூகுள் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.