விளையாட்டாக செய்த DNA பரிசோதனை - பேரதிர்ச்சியில் தம்பதி!
DNA பரிசோதனை செய்துக்கொண்ட தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
DNA பரிசோதனை
அமெரிக்காவின் கொலராடோவில் வாழும் ஒரு தம்பதி காதலித்து திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 10 வருடமாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
பொதுவாக மேலைநாடுகளில் டி.என்.ஏ. பரிசோதனை என்பது எளிதாக மேற்கொள்ளும் வகையில் உள்ளது. அதன் அடிப்படையில், அந்த தம்பதி தங்களின் மூதாதையர்களை பற்றி அறிந்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
தம்பதி அதிர்ச்சி
அதன்படி, டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. உறவு முறையில் மணம் முடிக்கும் போது அது தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் அறிவியல் பூர்வமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இதுகுறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் அத்தம்பதியினர். இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.