வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரப் பதிவு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பத்திரப் பதிவு சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவு
முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யும் வகையில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, முறையாக விசாரணை நடத்தாமல் மாவட்ட பதிவாளர், பத்திரங்களை ரத்து செய்வதாக சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சட்டத்திருத்தம் நிறுத்திவைப்பு
விசாரணைக்கான காலவரம்பு மற்றும் விதிமுறைகள் இல்லை என்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்தினை நிறுத்தி வைத்து, விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.