மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்

registration document
By Fathima Apr 13, 2021 06:42 PM GMT
Report

மங்களகரமான நாட்களில் பத்திரவுப்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பத்திரவு பதிவுத்துறை தலைவருக்கு பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பத்திரப்பதிவு துறையின் வருவாயை பெருக்கும் வகையில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய நாட்களில் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலனை செய்ததில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.