'ஸ்டார் 2.0' அப்டேட், வில்லங்க சான்றிதழ் பெற கட்டணமே தேவையில்லை - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு!

Tamil nadu India
By Vinothini Jul 27, 2023 06:06 AM GMT
Report

வில்லங்க சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள பத்திரப்பதிவு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கை

தமிழ்நாட்டின் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் 'ஸ்டார் 2.0' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

can-download-ec-from-1950-for-free

கடந்த 1975-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துக்குரிய அட்டவணை-2 பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

1950-ல் இருந்து பதிவிறக்கம்

இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இருக்கும் இந்த வசதி, கடந்த 1950-ம் ஆண்டு ஜன 1 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

can-download-ec-from-1950-for-free

இதன்படி கடந்த 1950 ஜனவரி 1 முதல் 1974 டிச.31 வரையிலான காலத்துக்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும், பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் இந்த காலகட்டத்துக்கான அட்டவணை-2 பதிவேடுகளை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுஅளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் முடிவடைந்ததும் கடந்த 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும் என்று குறிப்பிட்டுள்ளனர்.