அடேங்கப்பா.. ராமர் கோயிலுக்கு அம்பானி குடும்பம் அளித்த நன்கொடை - எவ்வளவு தெரியுமா?

Uttar Pradesh Mukesh Dhirubhai Ambani Ayodhya Ram Mandir
By Sumathi Jan 23, 2024 08:27 AM GMT
Report

 ராமர் கோயிலுக்கு அம்பானி குடும்பம் அளித்த நன்கொடை குறித்த தகவல் கவனம் பெற்றுள்ளது.

 ராமர் கோவில்

உத்திரப் பிரதேசம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், குழந்தை பருவ ராமர் சிலைக்கு பூஜை, சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ambani family in ayodhya

இந்த விழாவில் மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதன்படி, நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் போன்ற பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

திருப்பதியில் காத்திருக்கு நேரம் குறைப்பு - காரணம் அயோத்தி ராமர்தான்?

திருப்பதியில் காத்திருக்கு நேரம் குறைப்பு - காரணம் அயோத்தி ராமர்தான்?

அம்பானி நன்கொடை

இந்தக் கோவிலானது பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர். அந்த வகையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 2.51 கோடி அளித்துள்ளார்கள்.

ayodhya ram mandir

57,400 சதுரஅடியில் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. கோயிலுக்காக மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி படு வைரலாகி வருகிறது.