ரஜினி முதல் கோலி வரை; ராமர் கோவில் விழாவில் பிரபலங்கள் - இதுதான் லிஸ்ட்!
ராமர் கோவில் விழாவில் பங்கேற்க போகும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ராமர் கோவில் விழா
உத்திரப் பிரதேசம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதில், குழந்தை பருவ ராமர் சிலைக்கு பூஜை, சடங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிரபலங்கள் பங்கேற்பு
மேலும், இந்த விழாவில் மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் இருந்தும் பல பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.
தென்தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் ஆடலரசன் தனது மனைவியுடன் பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை சடங்குகளை மேற்கொள்ளவுள்ளார். முன்னாள் வீரர்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், எம்எஸ் தோனி உள்ளிட்டோரும், தற்போதைய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உள்பட ஏராளமானவர்களும், அமிதாப் பச்சன், கங்கனா ரணாவத், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், அனுபம் கேர், விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, ராம் சரண் உள்பட இன்னும் பலர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.