ராமர் மீது பக்தி - அயோத்தி கோவிலுக்கு 1,425 கி.மீ. தூரம் முஸ்லிம் பெண் நடை பயணம்!

India Ayodhya Ayodhya Ram Mandir
By Jiyath Jan 22, 2024 02:21 AM GMT
Report

மும்பையிலுருந்து முஸ்லிம் பெண் ஒருவர் அயோத்தி ராமர் கோவிலுக்கு 1,425 கி.மீ தூரம் நடைபயணம் தொடங்கியுள்ளார்.

நடை பயணம்

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது.

ராமர் மீது பக்தி - அயோத்தி கோவிலுக்கு 1,425 கி.மீ. தூரம் முஸ்லிம் பெண் நடை பயணம்! | Muslim Woman Walking From Mumbai To Ram Temple

இந்த விழாவில் பங்கேற்க ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து 1,425 கி.மீ தூரம் நடைபயணம் தொடங்கியுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் ராமன்ராஜ் சர்மா, வினீத் பாண்டே ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஷப்னம் காவிக்கொடியுடன் நடைபயணம் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,வழியெங்கும் மக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

நம்பிக்கை பயணம்

இதுகுறித்து ஷப்னம் கூறுகையில் "நான் முஸ்லிமாக இருந்தாலும். எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி. ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ராமர் மீது பக்தி - அயோத்தி கோவிலுக்கு 1,425 கி.மீ. தூரம் முஸ்லிம் பெண் நடை பயணம்! | Muslim Woman Walking From Mumbai To Ram Temple

ஒரு நல்ல மனிதனாக இருப்பதுதான் முக்கியம். இதை நம்பிக்கையின் பயணமாக நாங்கள் பார்க்கிறோம். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். சாதி, மத, இன பேதமின்றி அவர் பொதுவாக இருக்கிறார். சில சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான கருத்துகள் வருகின்றன. அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை" என்றார்.