திருப்பதியில் காத்திருக்கு நேரம் குறைப்பு - காரணம் அயோத்தி ராமர்தான்?
அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
அயோத்தி ராமர்
உத்தரபிரதேச மாநில அயோத்திய நகரில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தை துவங்கிவைத்த நிலையில், அந்நகரமே விழா கோலம் பூண்டது.
திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை ஓரம்கட்டி அதிகப் பக்தர்களையும், காணிக்கையும் பெறும் கோயிலாக அயோத்தி ராமர் கோயில் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருப்பதிக்கு தினமும் 50000 முதல் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் பெற்று வருகிறார்கள். இதன் மூலம் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 3 கோடி முதல் 4 கோடி மக்கள் வருகின்றனர். தற்போது, ராமர் கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 100 மில்லியன் அதாவது 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு, அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து ஹோட்டல்களும் புக்கிங் ஆகியுள்ளது.
ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தால் மற்ற கோயில்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறையுமா என்ற கேள்வி எழுகிறது. இதனால் திருப்பதியில் காத்திருப்பு காலமும் குறைய வாய்ப்பு உள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.