ஜெயலலிதா அண்ணன் எனக் கூறி சொத்தில் பாதியை கேட்ட முதியவர்!

J Jayalalithaa AIADMK Karnataka
By Sumathi Jul 10, 2022 10:24 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் என மைசூரைச் சேர்ந்த முதியவர் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில், டி.நரசிபூர் தலுக்காவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ ரங்கராஜபுரம். இங்கு தான் 83 வயதான முதியவர் வாசுதேவன் வாழ்ந்து வருகிறார்.

ஜெயலலிதா அண்ணன் எனக் கூறி சொத்தில் பாதியை கேட்ட முதியவர்! | Alleged Brother Of Jayalalitha Mysore Asks Share

இருதய நோயாளியான இவர் மாதம் மாதம் தனக்கு கர்நாடக அரசிடம் இருந்து கிடைக்கும் ரூ.400 ஓய்வூதியத்தை வைத்து உயிர் வாழ்ந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக தன்னை ஜெயலலிதாவின் அண்ணன் என்று தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

முதியவர் வாசுதேவன்

மேலும் இவர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் என்றும், தந்தை ஜெயராமின் இரண்டாம் மனைவியான வேதவள்ளிக்கு பிறந்தவர்தான் ஜெயலலிதா, ஜெயக்குமார் என்றும் கூறுகிறார்.

ஜெயலலிதா அண்ணன் எனக் கூறி சொத்தில் பாதியை கேட்ட முதியவர்! | Alleged Brother Of Jayalalitha Mysore Asks Share

இதற்கு ஆதாரமாக ஜெயலலிதா சிறு குழந்தையாக இருந்தபோது தந்தை ஜெயராமிடம் முதல் மனைவி ஜெயம்மா ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும், அதில் இரண்டாம் மனைவியின் குழந்தைகளாக ஜெயலலிதாவும், ஜெயக்குமாரும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் கூறுகிறார்.

சொத்தில் பங்கு

இதற்கிடையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் உதவி நாடி முதியவர் வாசுதேவன் ஜெயலலிதாவிடம் பேசியபோதும், தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்று வெளியில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட போதும் ஜெயலலிதா ஆதரவளித்ததில்லை என்று தெரிகிறது.

மேலும் முதியவர் வாசுதேவன் மீது ஜெயலலிதா டீபெமேசன் வழக்கு தொடர்ந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறிருக்க இந்த முதியவர் வாசுதேவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தீர்ப்பில் திருத்தம்

மேலும் அந்த மனுவில், "ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமார் முன்பே இறந்துவிட்டார். அதனால் இன்றைய தினத்தில் உயிருடன் இருக்கும் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடிவாரிசு நான்.

எனக்குப்பிறகே அடுத்த தலைமுறையான ஜெயக்குமாரின் மகன், மகன் ஆகிய ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகும்." "எனவே ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை தர வேண்டுமெனவும்,

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டு கட்டாக பணம்! பரபரப்பு வீடியோ!