செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ஏலியன்கள்? திட்டம்போட்டு வேட்டைக்கு செல்லும் NASA!

United States of America NASA World
By Jiyath May 22, 2024 06:38 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம் 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ஏலியன்கள்? திட்டம்போட்டு வேட்டைக்கு செல்லும் NASA! | Aliens On Mars Nasa S Hunting Intensity

இதற்காக செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ESA உடன் நாசா கைகோர்த்துள்ளது. அந்த நிறுவனத்துடன் சேர்ந்து "எக்ஸோமார்ஸ் ரோசலின்ட் ஃபிராங்க்ளின்" என்ற ரோவரை வரும் 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவ நாசா முடிவு செய்துள்ளது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்! வெளிச்சமே இல்லை - செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்!

என்ன ஒரு புத்திசாலித்தனம்! வெளிச்சமே இல்லை - செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்!

உயிரினங்கள் வாழ்ந்ததா?

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அங்குள்ள பனி மாதிரிகளை சேகரிப்பதற்காக 6.5 அடிக்குக் கீழ் தோண்டி எடுக்கும். இதன் மூலம் 300 கிராம் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நடமாடும் ஏலியன்கள்? திட்டம்போட்டு வேட்டைக்கு செல்லும் NASA! | Aliens On Mars Nasa S Hunting Intensity

இந்த திட்டத்தில் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பது தெரியவரும். மேலும், அதனடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

அதேபோல் மற்ற கிரகங்களில் ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்று கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அதற்காக விஞ்ஞானிகள் சல்லடைப் போட்டுத் தேடியும், அதற்கான தடயம் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.