என்ன ஒரு புத்திசாலித்தனம்! வெளிச்சமே இல்லை - செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்!

Italy World
By Jiyath May 21, 2024 06:10 AM GMT
Report

செயற்கை சூரியனை உருவாக்கி கிராமம் ஒன்று சாதனை படைத்துள்ளது. 

சூரிய ஒளி

இத்தாலி நாட்டில் விக்னெல்லா என்ற கிராமம் உள்ளது. இத்தாலிக்கு சுவிட்சர்லாந்துக்கும் இடையே அமைந்துள்ள இந்த சிறிய கிராமத்தில் 200 பேர் வசிக்கின்றனர். இங்கு நவம்பர் 11-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்! வெளிச்சமே இல்லை - செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்! | No Sunlight The Village Created The Artificial Sun

இதனால் அக்கிராம மக்கள் அண்டார்டிக்காவில் இருப்பது போல் உணர்கின்றனர். இதற்கு தீர்வு காண நினைத்த அக்கிராம மக்கள் கடந்த 2005-ம் ஆண்டு சுமார் 1 கோடி ரூபாய் நிதி திரட்டினர்.

[

பிரச்னைக்கு  தீர்வு

பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு ஊர் எதிரே உள்ள மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். 1100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இதன் எடை 1.1 டன். உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது குறைந்த அளவு சூரிய ஒளி படும்போது அது ஒளியை எதிரொளிக்கும்.

என்ன ஒரு புத்திசாலித்தனம்! வெளிச்சமே இல்லை - செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்! | No Sunlight The Village Created The Artificial Sun

அதன் அடிப்படையில் விக்னெல்லா கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது. தங்களது கிராமத்தின் மிகப்பெரிய பிரச்னைக்கு அங்குள்ள மக்களே தீர்வு கண்ட விதம் உலகம் முழுமைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.