கடலிலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் மலைக்குகை - அதற்குள் ஒரு அழகிய கிராமம்!
ஒரு மலையின் குகைக்குள் அமைந்திருக்கும் கிராமத்தில் மக்கள் வசித்து வருகின்றனர்.
குகை கிராமம்
சீனாவில் Guizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் என்ற பகுதியில் ஒரு பெரிய மலையின் குகை அமைந்துள்ளது. இந்த குகைக்குள் சுமார் 100 பேர் கொண்ட சிறிய கிராமம் உள்ளது. இந்த இடத்தல் சுமார் 18 குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதனால் ங்கு வாழும் மக்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் குழந்தைகளுக்காக அங்கேயே ஒரு பள்ளிக்கூடம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் குகைக்குள் வாழ்வதற்கு கடந்த 2008-ம் ஆண்டு சீன அரசு தடை விதித்ததால் இந்த பள்ளி மூடப்பட்டது. மேலும், குகையை விட்டு வெளியேற கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று அக்கிராம மக்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
குகையிலிருந்து பள்ளி நிறுத்தப்பட்டதால், இங்குள்ள மாணவர்கள் 2 மணி நேரம் கடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் கல்வி பயின்று வருகின்றனர். சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போர் வெடித்தது.
இந்த போரின் இறுதிக்கட்டத்தில் மலைப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த குகையில் குடியேறினர். இதனையடுத்து பல காலகட்டமாக அங்கேயே வாழ்ந்துவரும் மக்கள் தங்களுக்கான வீடு, விவசாயம் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த பகுதி கடுமையான குளிர் மற்றும் வெப்பத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பதாகவும், இங்கேயே வாழ்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஊடகங்களின் பார்வை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இந்த குகை கவனத்தை ஈர்த்துள்ளது.