ராஷ்மிகாவுடன் லிப்லாக் சீன்; ரொமான்ஸ் காட்சிகள் - ரன்பீர் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
ஆலியா பட் படக்குழுவினரை பாராட்டி பதிவை பகிர்ந்துள்ளார்.
அனிமல்
பிரம்மாஸ்திரா படத்தில் நடிக்கும் போது ரன்பீர் கபூர், ஆலியா பட் காதலிக்க ஆரம்பித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். முதல் நாளில் 116 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலியா பாராட்டு
இதில், ராஷ்மிகா மந்தனா மற்றும் திமித்ரி என இரு நடிகைகளுடன் ரன்பீர் கபூர் அதீத நெருக்கமாக நடித்திருப்பார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆலியா பட் அப்செட் ஆகி விடுவார் என தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆலியா பட் கிரஷ்மிகா கிளப்பில் நானும் இணைந்து விட்டேன்.
சந்தீப் ரெட்டி வங்கா போல ஒரு ஆள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார். அனிமல் படம் தாறுமாறாக உள்ளது. பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்டோரின் நடிப்பு வேறலெவல். அனிமல் பார்க் பர்ஃபார்மன்ஸ் என தனது கணவர் ரன்பீரையும் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.