மாயமான நபர் 26 ஆண்டுக்கு பின் வீட்டின் அருகிலேயே கண்டுபிடிப்பு - அதிர்ந்த போலீசார்!
காணாமல் போன நபர் 26 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டின் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மாயமான நபர்
அல்ஜீரியா நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது ஒமர். பி என்பவர் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், நீண்ட ஆண்டுகளாக ஒமர். பியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் Djelfa நகரில் வைக்கோல்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கண்டுபிடிப்பு
உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒமர். பி என்பவர் தான் அந்த நபர் என்பது 26 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்தது. மேலும், ஒமர்.பியின் சகோதரர் ஒருவர் தான் அவரை கடத்தி வீட்டிலேயே சிறைபிடித்து வைத்துள்ளார்.
இதனையடுத்து குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை சிறைபிடித்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், ஒமர்.பியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான், அவரை சிறைப்பிடித்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.