அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; மல்லுக்கட்டும் வீரர்கள் - 7 பேர் தகுதிநீக்கம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க, 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தகுதி நீக்கம்
முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், போட்டியிலிருந்து 7 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, முதல் சுற்று நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.