“தைரியம் இருந்தா என்ன பிடிச்சு காட்டு பார்ப்போம்...” - ஜல்லிக்கட்டில் மாஸ் காட்டி ரகளை செய்த காளை
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் முயன்று வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு ஆகும். அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த் நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இதில் காளை ஒன்று வாடிவாசல் வழியாக வீரர்களை சந்தித்து விட்டு, பின்பும் ஆக்ரோஷம் தாங்காமல் அங்கே படுத்து அடம்பிடித்துள்ளது. இக்காட்சி இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மிகவும் ஹைலைட்டாக தீயாய் பரவி வருகின்றது.