உலக புகழ்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 300 வீரர்களும் களம் காண உள்ளனர். வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.