பிரஷாந்துக்கு கிடைக்க வேண்டியதை - தட்டி தூக்கிய அஜித் !
தீனா படத்தில் அஜித்துக்கு பதிலாக பிரஷாந்த் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார். அவருக்கென ஒரு ரசிகர்கள் கடலே உள்ளது. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது 53வது பிறந்தநாள் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் தீனா. இந்த படம் வெளியாகி 23 வருடங்களை கடந்திருந்த நிலையில் ரீ ரிலிஸாகியுள்ளது. தீனா படத்தில் அஜித் கேங்ஸ்டராகவும், பாசமான அண்ணனாகவும் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார்.
இவர்களுடன் சுரேஷ் கோபி, திவ்யா, ஸ்ரீமன், சியாம் கணேஷ், ராஜேஷ், சீலா, உள்ளிட்டா பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் அஜித்துக்கு மட்டுமின்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் திருப்புமுனயாக அமைந்தது. ரீ ரிலிஸான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 மாதம் கூட நீடிக்காத முதல் திருமணம் - பிரிய இப்படி ஒரு காரணமா..? 51 வயதில் டாப் ஸ்டாருக்கு 2-வது திருமணம்..!
பிரஷாந்த்
இந்நிலையில் தற்போது தீனா படத்தில், அஜித்துக்கு முன்பு ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் 23 வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பேசியிருந்தார்,
தீனா படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தன்னுடைய மகன் தான் எனக் கூறியுள்ளார். கதை பிரசந்திற்கு பிடித்திருந்த போதிலும், அப்போது அதிக படங்களில் வரிசையில் இருந்ததால் இயக்குநரிடம் காத்திருக்கும் படி கூறினார்.
ஆனால் அதற்குள் ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து ‘தீனா’ படத்தை எடுத்து முடித்து விட்டதாக தெரிவித்ததாக அவர் கூறினார். தீனா கதாபாத்திரத்தில் அஜித் வாழ்ந்து நடித்திருந்த நிலையில், பிரஷாந்தை விட அஜித்தே மிகவும் பொருத்தமானவர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
